மாண்புமிகு மாணவன், பூவே உனக்காக...விஜய்யின் நோஸ்டால்ஜிக் பட போஸ்டர்களுடன் நடைபெற்ற தளபதி 69 பூஜை!
செய்தி முன்னோட்டம்
விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.
பூஜையின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அதில் விஜய்யின் ஆரம்ப கால படங்களின் போஸ்டர்கள் இடப்பெற்றுள்ளது.
மாண்புமிகு மாணவன், காலமெல்லாம் காத்திருப்பேன், பூவே உனக்காக, திருமலை உள்ளிட்ட படங்களின் போஸ்டர்கள் அரங்கத்தில் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ளது.
விஜயின் திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் இந்த அரங்கம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. படத்தின் ஷூட்டிங் இன்று முதல் துவங்குகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
H.வினோத்- விஜய் கூட்டணியில் உருவாகும் தளபதி 69 திரைப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் எனக்கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Neenga ethirpathu kondirundha Poojai video idhoo ♥️
— KVN Productions (@KvnProductions) October 4, 2024
Shoot commences tomorrow 🔥#Thalapathy69Poojai#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @hegdepooja @_mamithabaiju @anirudhofficial @Jagadishbliss @LohithNK01 @sathyaDP… pic.twitter.com/J0GuqDaTUa