Page Loader
தளபதி 69: பூஜை ஸ்டில்ஸ் வெளியானது; விஜய், பூஜா ஹேக்டே, பாபி தியோல் பங்கேற்பு
தளபதி 69 பூஜை ஸ்டில்ஸ்

தளபதி 69: பூஜை ஸ்டில்ஸ் வெளியானது; விஜய், பூஜா ஹேக்டே, பாபி தியோல் பங்கேற்பு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 04, 2024
03:14 pm

செய்தி முன்னோட்டம்

விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. H. வினோத்- விஜய் கூட்டணியில் உருவாகும் தளபதி 69 திரைப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் எனக்கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று நடந்த படத்தின் பூஜையில், விஜய்யுடன், இயக்குநர் H.வினோத், நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ மற்றும் நரேன் கலந்து கொண்டனர். இது விஜய்யின் கடைசி படம் என்பதில், இப்படத்தின் மீது ரசிகர்கள் மட்டுமின்றி, திரைத் துறையிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post