தளபதி 69 : யாரும் எதிர்ப்பார்க்காத ட்விஸ்ட்; மீண்டும் விஜய் உடன் இணைகிறார் GVM
செய்தி முன்னோட்டம்
தளபதி 69 படத்தின் நடிகர், நடிகைகளின் கேஸ்ட் ரிவீல் (cast reveal) இரண்டு நாளாக நடைபெற்று வருகிறது.
இது வரை இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டவர்கள் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று ரசிகர்களுக்கு மற்றுமொரு சர்ப்ரைஸ்-ஐ படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, லியோ படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய் உடன் இணைகிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.
தளபதி 69 படத்தினை KVN புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தை இயக்கவுள்ளது ஹெச். வினோத். படத்திற்கு இசையமைக்கவுள்ளது அனிருத்
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Inga Yenna solludhu.. indha surprise update ungala thala keezha potu thirupirkum-nu 😁
— KVN Productions (@KvnProductions) October 3, 2024
Welcome onboard @menongautham ♥️#Thalapathy69CastReveal#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @hegdepooja #MamithaBaiju @anirudhofficial @Jagadishbliss @LohithNK01 pic.twitter.com/4e65wzirwr
GVM - விஜய்
யோஹான் படத்தில் மிஸ் ஆனா காம்போ, மீண்டும் இணைகிறது
அறியாதவர்களுக்கு, GVM விஜயயை நாயகனாக வைத்து யோஹான் அத்தியாயம் ஒன்று என்ற படத்தினை இயக்குவதாக இருந்தார்.
அதற்கான பேச்சு கடந்த 2012 ஆம் ஆண்டே வெளியானது.
ஆனால், அப்போது இயக்குனர் GVM இடம் படத்தின் 75% கதை மட்டுமே கையில் இருந்ததாகவும், நடிகர் விஜய் முழு பௌன்டட் ஸ்கிரிப்ட் இல்லாமல் படத்தினை தொடர முடியாது என மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.
அதன்பின்னர், இந்த இருவரும் ஒன்று சேர்ந்து ஒரு படம் வெளியாகாதா என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக அவர்கள் லியோ படத்தில் நடித்தனர். தற்போது ஸ்வீட் சர்ப்ரைஸாக இவர்கள் மீண்டும் இணைகிறார்கள்.