Page Loader
பிரபல சீரியல் நடிகர் தற்கொலை: நடிகை பவித்ராவின் உயிரிழப்பை அடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் 

பிரபல சீரியல் நடிகர் தற்கொலை: நடிகை பவித்ராவின் உயிரிழப்பை அடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் 

எழுதியவர் Sindhuja SM
May 18, 2024
04:25 pm

செய்தி முன்னோட்டம்

தெலுங்கு நடிகர் சந்திரகாந்த், தெலுங்கானா மாநிலம் அல்காபூரில் உள்ள தனது வீட்டில் நேற்று தற்கொலை செய்து கொண்டார். கன்னட தொலைக்காட்சி நடிகையான பவித்ரா ஜெயராம் இரண்டு நாட்களுக்கு முன் மரணமடைந்ததை அடுத்து சந்திரகாந்த் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 'த்ரிநயனி' என்ற பிரபல தெலுங்கு சீரியலில் நடிகர் சந்திரகாந்த் மற்றும் நடிகை பவித்ரா ஜெயராம் ஆகியோர் கணவன் மனைவி கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும் இருவரும் சேர்ந்து ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும் பேசப்பட்டு வந்தது.

சினிமா செய்தி 

சந்திரகாந்த் மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல் 

அவர்களின் உறவு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அவர்கள் ஆறு ஆண்டுகளாக டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கடந்த வாரம், கர்னூல் அருகே கார் விபத்தில் பவித்ரா ஜெயராம் பரிதாபமாக உயிரிழந்தார். அதே நேரத்தில் சந்திரகாந்த் பெரிய காயம் அடைந்தார். பவித்ரா ஜெயராம் உயிரிழந்ததில் இருந்து சந்திரகாந்த் மன அழுத்தத்தில் இருந்ததாக சந்திரகாந்தின் தந்தை கூறியுள்ளார். மேலும், தனது சமூக ஊடக கணக்குகளில் பவித்ரா ஜெயராம் குறித்து உணர்ச்சிவசமான பதிவுகளை பகிர்ந்து கொண்ட சந்திரகாந்த், தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார் இந்நிலையில், தெலுங்கு நடிகர் சந்திரகாந்த், தெலுங்கானா மாநிலம் அல்காபூரில் உள்ள தனது வீட்டில் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.