தமிழக அரசின் 2015ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் அறிவிப்பு
2015ஆம் ஆண்டுக்கான, தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. இதற்கான விழா, நாளை, மார்ச் 6ஆம் தேதி மாலை, சென்னை RAபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை டிஎன் ராஜரத்தினம் கலையரங்கத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2015ஆம் ஆண்டுக்கான சிறந்த படத்திற்கான முதல் பரிசை 'தனி ஒருவன்' திரைப்படம் பெற்றுள்ளது. இரண்டாம் பரிசு 'பசங்க 2' படத்திற்கும், மூன்றாம் பரிசு 'பிரபா' படத்திற்கும் கிடைத்துள்ளது. மேலும், சிறப்பு பரிசாக 'இறுதி சுற்று' படத்திற்கும், பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படமாக '36 வயதிலேயே' படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான விருதை, 'இறுதி சுற்று'ல் நடித்ததற்காக மாதவனும், சிறந்த நடிகைக்கான விருதை '36 வயதிலே' படத்தில் நடித்ததற்காக ஜோதிகாவும் பெறுகின்றனர்.
2015ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள்
சிறந்த நடிகருக்கான சிறப்பு பரிசு: கௌதம் கார்த்திக் (வை ராஜா வை) சிறந்த நடிகைக்கான சிறப்பு பரிசு: ரித்திகா சிங் (இறுதி சுற்று) சிறந்த வில்லன் நடிகர் : அரவிந்த்சாமி (தனி ஒருவன்) சிறந்த நகைச்சுவை நடிகர்: சிங்கம் புலி(அஞ்சுக்கு ஒன்னு) சிறந்த நகைச்சுவை நடிகை: தேவதர்ஷினி (36 வயதினிலே, திருட்டு கல்யாணம்) சிறந்த கதாசிரியர்: ஜெயம் ராஜா (தனி ஒருவன்) சிறந்த இயக்குனர்: சுதா கொங்கரா (இறுதி சுற்று) சிறந்த இசையமைப்பாளர்: ஜிப்ரான் (உத்தம வில்லன், பாபநாசம்) சிறந்த பின்னணி பாடகர்: கானா பாலா (வை ராஜா வை) சிறந்த பின்னணி பாடகி: கல்பனா ராகவேந்திரா(36 வயதினிலே) சிறந்த ஒளிப்பதிவாளர்: ராம்ஜி (தனி ஒருவன்) சிறந்த நடன ஆசிரியர்: பிருந்தா (தனி ஒருவன்)