இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள்
திரையரங்குகளில் தமிழில் இந்த வாரம் மூன்று திரைப்படங்கள் வெளியாகின்றன. அவை என்னென்ன என்று பார்க்கலாம். லியோ- பெரும் எதிர்பார்ப்புகள் மற்றும் சர்ச்சைகளுக்கு நடுவே, நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் இன்னும் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்காதநிலையில், லியோ திரைப்படம் இப்பகுதிகளில் வெளியாவதில் தொடர் இழுபறிநிலவி வருகிறது. படம் விநியோகம் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கிடையே ஷேர் பிரச்சனை, சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிப்பதில் தமிழ்நாடு அரசு காட்டிய கண்டிப்பு, படத்தின் ட்ரெய்லரில் விஜய் பேசிய ஆபாசவார்த்தை, அரசியல் காரணங்களால் படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்துசெய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டு என சர்ச்சைகளால் சூழப்பட்டுள்ள லியோ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மட்டும் குறையவில்லை.
திரையரங்க வெளியீடுகள்- 2
கணபத் - ஏ ஹீரோ இஸ் போரன் பான்- பாலிவுடில் அமிதாப்பச்சன், கீர்த்தி சனோன், டைகர் ஷெராஃப், உள்ளிட்டோர் நடிப்பில் சயின்ஸ் பிக்ஷன் படமாக வெளியாகிறது. 2070-ஆம் ஆண்டு நடைபெறும் திரைக்கதையில், உலகம், வெள்ளிநகரம் மற்றும் ஏழைகளின் உலகம் இரண்டாக பிரிந்து கிடக்கிறது. கணபதி என்பவர் நம்பிக்கையின் உருமாக வளர்ந்து, இரண்டு சமுதாயங்களுக்கிடையே உள்ள இடைவேளையை குறைப்பது தான் கதை. திரையின் மறுபக்கம்- விவசாயியான ஒருவர் சினிமா எடுக்கும் ஆசையில், தன் நிலங்களை அடமானம் வைக்கிறார். சினிமாவில் அனுபவும் இல்லாததால் தன் வீட்டையும் அடமானம் வைக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். இருந்தபோதும் உரிய நேரத்தில் திரைப்படத்தை எடுக்கமுடியாமல் போக, இறுதியில் என்ன ஆகிறது என்பது கதை. இவ்விரு திரைப்படங்களும் 20 ஆம் தேதி வெளியாகிறது
ஓடிடி வெளியீடுகள்
ரெட் சாண்டல் வுட்- குரு சோமசுந்தரம் இயக்கத்தில், 'எட்டு தோட்டாக்கள்' நடிகர் வெற்றி, திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆந்திர பிரதேசத்தில் செம்மரக் கடத்தலில் நடைபெற்ற எதிர் சம்பவத்தால் ஈர்க்கப்பட்டு உருவானது எத்தனை படத்தின் திரைக்கதை. ஜட்டி வாய்ந்த செம்மரக்கடத்தில் சிண்டிகேட்டுக்கும், சட்ட இயந்திரத்திற்கும் நடுவில் சிக்கிய சாமானிய தொழிலாளியின் கதைதான் இத்திரைப்படம். இத்திரைப்படம் ஆஹா ஓடிடியில் வரும் அக்டோபர் 20 ஆம் தேதி வெளியாகிறது.