Page Loader
இந்த வாரம் எந்த திரைப்படங்கள் திரைக்கு வருதுன்னு தெரியுமா?
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகப்போகும் தமிழரசன் திரைப்படத்தின் போஸ்டர்

இந்த வாரம் எந்த திரைப்படங்கள் திரைக்கு வருதுன்னு தெரியுமா?

எழுதியவர் Venkatalakshmi V
Apr 19, 2023
05:29 pm

செய்தி முன்னோட்டம்

சென்ற வாரம், தமிழ் புத்தாண்டை ஒட்டி, பல பெரிய பட்ஜெட் தமிழ் திரைப்படங்கள் திரைக்கு வந்ததை அடுத்து, சில சிறிய பட்ஜெட் படங்கள் இந்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. அப்படி இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக போகும் திரைப்படங்களின் பட்டியல் இதோ: யாத்திசை: பாண்டியர்களின் வரலாற்றை பற்றி பேசும் படமாக உருவாகியுள்ளது 'யாத்திசை'. தரணி ராஜேந்திரன் இயக்கி உள்ள இந்த படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ளார்கள். இந்த படம் வருகிற ஏப்ரல் 21-ந் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி ரிலீஸ் செய்கிறது. யானை முகத்தான்: யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தின் வெளியீடு ஏற்கனவே தள்ளிபோடப்பட்டது தான். இத்திரைப்படத்தில், ஊர்வசி, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் நடித்துள்ளனர்.

card 2

விமல் நடிப்பில் வெளியாக போகும் இரண்டு படங்கள்

தமிழரசன்: இந்த திரைப்படமும் சென்ற வாரம் வெளிவர வேண்டியது. விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை, இளையராஜா. ரம்யா நம்பீசன் ஹீரோயினாக நடிக்கிறார். தெய்வ மச்சான்: இந்த வாரம் விமல் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாக போகிறது. அதில் ஒன்று தெய்வ மச்சான். இந்த படத்தை மார்டின் நிர்மல் குமார் இயக்கியுள்ளார். சின்னத்திரை பிரபலம் அனிதா சம்பத், விமலின் தங்கையாக நடித்துள்ளார். படத்தில் பாண்டியராஜன், பால சரவணன், ஆடுகளம் நரேன் என பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். குலசாமி: விமல் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை, புதுமுக இயக்குனர் சரவணன் சக்தி என்பவர் இயக்கியுள்ளார். தான்யா ஹோப் படத்தின் நாயகியாக நடிக்கிறார்.