
மற்றுமொரு சரித்திர திரைப்படம்: 'யாத்திசை' ட்ரைலர் இன்று வெளியாகிறது
செய்தி முன்னோட்டம்
இந்திய சினிமாவில் தற்போது சரித்திர காலம் போலும். தொடர்ந்து கிட்டத்தட்ட அனைத்து மொழிகளும் பீரியட் படங்கள் வருகிறது.
பாகுபலி, பொன்னியின் செல்வன், ஷாகுந்தலாம் என பல படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
இந்த வரிசையில் தமிழில் அடுத்து வெளியாகப்போவது, 'யாத்திசை' என்ற திரைப்படம்.
7 ஆம் நூற்றாண்டில் நடப்பது போன்ற கதைக்களத்தில், சோழ-பாண்டிய உறவை பற்றியது இந்த திரைப்படம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த திரைப்படத்தின் ட்ரைலர் இன்று இரவு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு, ஐஸ்வர்யா ராஜேஷ், டி இமான், அர்ச்சனா கல்பாத்தி மற்றும் மோகன் ஜி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
யாத்திசை ட்ரைலர் வெளியீடு குறித்த அறிவிப்பு
The exciting trailer of the period drama #Yaathisai will be brought forward by big celebrities from across the industry 🔥 today at 7.08PM! @mohandreamer @immancomposer @archanakalpathi @aishu_dil@Venusinfotain @kjganesh082 @SakthiFilmFctry @dhararasendran @sakthivelan_b… pic.twitter.com/cCgYFWihpa
— Ramesh Bala (@rameshlaus) April 5, 2023