இந்திய இதிகாசங்களை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்களில் பட்டியல்
இந்திய இதிகாசங்களை தழுவி பல படங்களும், சீரியல்களும் காலம் காலமாக எடுக்கப்பட்டு வருகின்றன. எத்தனை படங்கள் வந்தாலும், இதிகாச படங்களுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. சில நேரங்களில், இதிகாசங்களை, இதிகாச திரைப்படங்களாகவே எடுப்பார்கள். பல நேரங்களில், அதை தழுவி, நவீன திரைக்கதையில் பிணைக்கப்பட்டு எடுக்கப்படும். அப்படி, இந்திய இதிகாசங்களை தழுவி எடுக்கப்பட்ட படங்களின் பட்டியல்: தளபதி: மஹாபாரதத்தில் வரும் கர்ணன்-துரியோதனின் நட்பை சார்ந்து எடுக்கப்பட்ட திரைப்படம் இது. முறையற்ற பிறப்பால், தாயால் தூக்கி எறியப்பட்ட குழந்தை, தன் மானம் காத்த நண்பனுக்காக, அவன் கெட்டவனாகவே இருந்தாலும், கடைசி வரை அவனுடன் நிற்கும் கர்ணன் கதாபாத்திரத்தை தழுவி உருவானது ரஜினிகாந்தின் கதாபாத்திரம். அர்ஜுனன் கதாபாத்திரத்தில் அரவிந்த்சுவாமி, துரியோதனன் கதாபாத்திரத்தில் மம்மூட்டி ஆகியோர் நடித்திருந்தனர்.
இதிகாச திரைப்படங்கள்
இராவணன்: பெயருக்கேற்றார் போல, இராவணன்-ராமன் கதை தான் இந்த இராவணன். ராமனின் மனைவியை கடத்தி போகும் இராவணன். அவனை பழி தீர்க்க, அவனது கோட்டைக்கே வரும் ராமன். பல மொழிகளில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், ராமன் கதாபாத்திரத்தில், ப்ரித்திவிராஜ் மற்றும் இராவணன் கதாபாத்திரத்தில் விக்ரம் ஆகியோர் நடித்திருந்தனர். சீதா கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். ராம ஜெயம்: ராமனின் சந்தேகத்தால், சீதா காட்டிற்குள் வாசித்த காலத்தையும், அவரின் லவ-குசா என இரு குழந்தைகள் பற்றிய கதை தான் இது. நயன்தாரா நடிப்பில் வெளியான இந்த இதிகாச படம் பெரும் வெற்றி பெற்றது. ராம் சேது: ராமர் பாலத்தை பற்றிய கதை இது. ஹிந்தியில் எடுக்கப்பட்டு, பின்னர் தமிழில் டப் செய்து வெளியான திரைப்படம்.