Page Loader
இந்த வாரம் திரையரங்கில் வெளியாகவிருக்கும் திரைப்படங்களின் பட்டியல் 
வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கும் கஸ்டடி வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கிறது

இந்த வாரம் திரையரங்கில் வெளியாகவிருக்கும் திரைப்படங்களின் பட்டியல் 

எழுதியவர் Venkatalakshmi V
May 10, 2023
09:11 am

செய்தி முன்னோட்டம்

கடந்த இரு மாதங்களாக வரிசையாக பல தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிக்கொண்டே இருக்கிறது. தற்போது கோடை விடுமுறை வேறு. அதனால், தொடர்ந்து வார இறுதியில் புதிய படங்கள், திரையரங்கிற்கு வந்த வண்ணம் உள்ளது. இந்த வாரம், திரையரங்கில் வெளியாக போகும் திரைப்படங்களின் பட்டியல் இதோ: கஸ்டடி: வெங்கட்பிரபு முதல்முறையாக நேரடி தெலுங்கு படம் இயக்கியுள்ளார். தெலுங்கில் பிரபலமான இளம் நடிகராக அறியப்பட்ட நாக சைதன்யாவை, தமிழுக்கு அறிமுகம் செய்கின்றனர். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கஸ்டடி படத்திற்கு இசையமைத்தது, இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா. இந்த திரைப்படத்தில் க்ரிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் முக்கிய வேடத்தில், அரவிந்த் ஸ்வாமி, சரத்குமார் ப்ரியாமணி ஆகியோர் நடித்துள்ளனர்.

card 2

திரைக்கு வரவிருக்கும் வேறுசில படங்கள் 

ஃபர்ஹானா: ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான வேடத்தில் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளியான போது சர்ச்சைகளை ஈர்த்தது. முஸ்லீம் பெண் வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். மேலும், 'ஜித்தன்' ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். ராவண கோட்டம்: ஷாந்தனு நடிப்பில் நீண்ட நாட்களாக எடுக்கப்பட்ட திரைப்படம் இது. இதன் இயக்குனர் 'மதயானை கூட்டம்' பட புகழ் விக்ரம் சுகுமாரன் ஆவர். படத்தின் நாயகியாக 'கயல்' ஆனந்தி நடித்துள்ளார். குட் நைட்: 'ஜெய் பீம்' படத்திற்கு பிறகு மணிகண்டன் நடிக்கும் திரைப்படம் இது. புதுமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் நாயகி, 'முதல் நீ முடிவும் நீ' படத்தில் நடித்த மீதா ரகுநாத்.