"சூர்யா எனக்கு எப்போதும் ஸ்பெஷல்"- நடிகர் சூர்யாவின் பேராசிரியர் ராபர்ட் நிகழ்ச்சி
நடிகர் சூர்யா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது கல்லூரி பேராசிரியரை சந்தித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். இது வைரலான நிலையில் யார் அந்த பேராசிரியர் என ரசிகர்கள் தேடத் தொடங்கினர். பேராசிரியர் ராபர்ட் லயோலா கல்லூரியில் வணிகவியல் துறையில் பேராசிரியராகவும் அத்துறையின் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது நடிகர் சூர்யா இவரை சந்தித்தது குறித்து இவர் பகிர்ந்து கொண்டு உள்ளார். தன்னிடம் படித்த எத்தனையோ பிரபலங்களின் பிள்ளைகளை விடவும் நடிகர் சூர்யா அவருக்கு மிக ஸ்பெஷலான நபராம்.
கல்லூரியில் சூர்யா ரொம்ப ஒழுக்கமான மாணவர்- பேராசிரியர் ராபர்ட்
"கடந்த 1992- 1995 சூர்யா என்கிட்ட தான் படிச்சார். சூர்யாவுக்கு நான் காலேஜ்ல மூணு சப்ஜெக்ட் எடுத்திருக்கேன்". "சூர்யாவை பொருத்தவரையில் படிப்பில் அவுட்ஸ்டாண்டிங் என்று சொல்ல முடியாது, ஆனால் நல்ல ஒழுக்கமான மாணவர். ஆசிரியர்களுக்கு ரொம்ப மரியாதை கொடுப்பார்". "ஒரு பெரிய நடிகரின் மகன் என எந்த தோரணையும் அவரிடம் உங்களால் பார்க்க முடியாது. கல்லூரியில் படித்தது போக வீட்டிற்கு வந்து ஆர்வமாக படிப்பார். ஆர்வமா சந்தேகங்களை கேட்டு தெரிஞ்சிக்க விரும்புவார்".
சூர்யாவுக்கு நான்தான் பிடித்தமான ஆசிரியர்- பேராசிரியர் ராபர்ட்
"சூர்யாவுக்கு நான்தான் பிடித்தமான ஆசிரியர். எந்த அளவுக்குநா எனக்கு ஒரு முறை பக்கவாதம் வந்திருந்தப்ப அவர் அதை கவனிச்சு என்ன டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனார்". "சென்னையில் இருக்க சிறந்த நியூரோ சர்ஜன் கிட்ட கூட்டிட்டு போய், மூணு நாள்ல என குணப்படுத்திவிட்டார். கூடவே அவங்க அவங்க அப்பாவையும் போன் பண்ணி வரச் சொல்லிட்டார்.என் மேல அவருக்கு அவ்வளவு பாசம்". "சூர்யா இப்போ பெரிய நடிகர் ஆயிட்டார் ஆனாலும் அவர் கொஞ்சம் கூட மாறல. இன்னும் என் மாணவராகவே இருக்கிறார்".
சூர்யா வந்து பார்த்தது ரொம்ப ஆறுதலா இருக்கு
"எனக்கு இப்போ 84 வயசு ஆச்சு. முதுமையிலும் தனிமையிலும் இரண்டு புத்தகங்களை எழுதி முடித்தேன். அதை சூர்யா பார்க்கணும்னு ஆசைப்பட்டேன்". "இது பற்றி சூர்யாவோட உதவியாளருக்கு நான் தெரியப்படுத்தினேன். அப்புறம் அதான் நானே மறந்துட்டேன்" "திடீர்னு ஒரு நாள் சூர்யா என்ன பாக்க வந்துட்டாரு. ஜோதிகா, குழந்தைகள் பற்றி என்கிட்ட பகிர்ந்து கொண்டார். உங்களை சந்தித்ததில் ரொம்ப சந்தோசம் சார் என்று சொன்னாரு" "சூர்யா கூட இருந்தது நிலாவுல இருந்த மாதிரி இருந்துச்சு" என சூர்யா தன்னை சந்தித்தது குறித்து பேராசிரியர் ராபர்ட் பகிர்ந்து கொண்டுள்ளார்.