28 ஆண்டுகளுக்கு பின் பேராசிரியரை சந்தித்த நடிகர் சூர்யா- புகைப்படங்கள் இணையத்தில் வைரல்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா, 28 ஆண்டுகளுக்கு பின் தன் பேராசிரியரை சந்தித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது தற்போது வைரலாகி இருக்கிறது. நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கும் 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை படித்த போது, இவருக்கு பேராசிரியராக இருந்த டாக்டர் ராபர்ட் என்பவருடன் எடுத்த புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். "எனது வழிகாட்டியான பேராசிரியர் டாக்டர் ராபர்ட்டை சந்தித்தது, ஆசி பெற்றது சிலிர்ப்பூட்டுகிறது, உங்களது பிரார்த்தனைகளுக்கு நன்றி"- என நடிகர் சூர்யா பதிவிட்டுள்ளார்.