'வாழ்க்கையை கொண்டாட கற்று தந்ததற்கு நன்றி": மனைவி ஜோதிகாவிற்கு சூர்யாவின் வாழ்த்து
செய்தி முன்னோட்டம்
கோலிவுட்டில் பல நட்சத்திரங்கள் தங்கள் தீபாவளியை குடும்பத்தினருடன் கொண்டாடி, தங்கள் ரசிகர்களுக்கு வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டனர்.
ஆனால் நடிகர் சூர்யா சற்று வித்தியாசமாக தீபாவளி பண்டிகைக்கு தன்னுடைய மனைவி ஜோதிகாவிற்கு நன்றி கூறியுள்ளார்.
ஜோதிகா தற்போது மம்மூட்டியுடன் காதல் என்ற மலையாள படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அதோடு, மும்பையில் தங்கள் குழந்தைகளின் படிப்பிற்காகவும், 2D என்டேர்டைன்மெண்ட் நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.
சூர்யாவும் சரி, ஜோதிகாவும் சரி, சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம், பரஸ்பரம் இருவரின் மீது அன்பும், மரியாதையும் வெளிக்காட்ட தவறுவதே இல்லை.
இந்நிலையில் தன் குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடிய சூர்யா, ஜோதிகாவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி, "வாழ்க்கையை கொண்டாட கற்று தந்ததற்கு நன்றி பொண்டாட்டி" எனக்குறிப்பிட்டுள்ளார்.