"கருப்பு" டீசர் வெளியீடு: சூர்யாவின் மிரட்டலான லுக், ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது
செய்தி முன்னோட்டம்
நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த "கருப்பு" திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இன்று வெளியிடப்பட்டது. இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் இந்த ஆக்ஷன்-டிராமா படத்தில் சூர்யா ஒரு வக்கீலாக நடித்துள்ளார். படத்தின் கதை என்னவென்றும், கதையின் மையம் என்னவென்றும் படக்குழு இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. எனினும், டீசரை பார்க்கும்போது சட்ட போராட்டம் மற்றும் டார்க் ஆக்ஷன் சினிமா என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா, இந்த படத்தில் தனது உண்மையான பெயரான "சரவணன்" என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வில்லன்
வில்லன் யார்?
வில்லன் யார் என்பதற்கு டீசர் விடை தரவில்லை. ஆனால், சிலர் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியே வில்லனாக நடித்திருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர். அவரது முகம் டீசரில் எங்கும் காணப்படவில்லை என்பது சந்தேகத்தை அதிகரிக்கிறது. இணையத்தில் தற்போதைய வைரல் நபர் திவாகர் (வாட்டர் மெலான் ஸ்டார்) பற்றிய ஓர் உவமை காட்சியும் டீசரில் இடம்பெற்றுள்ளது. தர்பூசணி சாப்பிடும் காட்சி மூலம், சமூக ஊடக கலாசாரத்தை அடையாளப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. 'கங்குவா', 'எதற்கும் துணிந்தவன்', 'ரெட்ரோ' ஆகிய படங்களின் தோல்விக்குப் பிறகு, சூர்யாவின் 'கருப்பு' திரைப்படம் அவரது காம்பேக்காக இருக்கும் என பார்க்கப்படுகிறது.
விவரங்கள்
படத்தில் நடிக்கும் நடிகர்கள் விவரங்கள்
இப்படத்தில் சூர்யா உடன் நாயகியாக த்ரிஷா நடிக்கிறார். இது சூர்யாவுடன் அவர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் படமாகும். இவர்களுடன் ஸ்வாசிகா, ஷிவதா, யோகி பாபு மற்றும் பலர் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'கருப்பு' திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு அல்லது 2026 பொங்கலுக்கு திரையிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.