Page Loader
கவினை ஹீரோவாக வைத்து கலகலப்பு 3 உருவாக்க திட்டமிடும் சுந்தர்.சி
இந்த கலகலப்பு-3 இல் நடிகர் கவினை நடிக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

கவினை ஹீரோவாக வைத்து கலகலப்பு 3 உருவாக்க திட்டமிடும் சுந்தர்.சி

எழுதியவர் Venkatalakshmi V
Feb 20, 2024
01:08 pm

செய்தி முன்னோட்டம்

நடிகரும், இயக்குனருமான சுந்தர்.சி பொதுவாக கலகலப்பான குடும்ப திரைப்படங்களை எடுப்பது வழக்கம். அவரது படங்களில் காமெடி தூக்கலாகவே இருக்கும். அந்த வகையில் அவர் இயக்கத்தில் வெளியான 'கலகலப்பு' திரைப்படத்தின் மூன்றாவது பாகத்தை எடுக்க திட்டமிட்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த கலகலப்பு-3இல் நடிகர் கவினை நடிக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதிலும், கவினுக்கு இரட்டை வேடம் வேறு. எனினும், தற்போது சுந்தர்.சி, அரண்மனை-4 படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால், அது முடிவடைந்த பிறகு இப்படத்தின் வேலைகளை துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், கவினும் வரிசையாக படங்களில் பிஸியாக உள்ளார். அவர் நடிப்பில் 'ஸ்டார்' என்ற படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. அதனை தொடர்ந்து வெற்றிமாறன் தயாரிப்பில் ஒரு படம் என பிஸியாக உள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

கலகலப்பு 3

ட்விட்டர் அஞ்சல்

கலகலப்பு 3