இந்திய சினிமாவில் இது வரை வெளியான 'சூப்பர்-ஹீரோ' வெற்றி படங்கள்
ஹாலிவுட்டில் மட்டுமே சாத்தியமாக இருந்த 'சூப்பர் ஹீரோ' கதைகளும், படங்களும் கடந்த சில காலமாகவே இந்திய சினிமாவிலும் எடுக்கப்பட்டு வருகிறது. "என்ன இருந்தாலும் ஹாலிவுட் படம் மாதிரி வராது!" என குறை குறைவர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு அந்த படங்களும் வெற்றி அடைந்தது. குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை பலரும் அந்த படங்களை ரசித்து பார்த்தனர். அசாத்தியமான துணிச்சல், சாகசங்கள், VFX என பல அம்சங்கள் நிறைந்திருக்கும் அத்தகைய படங்களின் பட்டியல் இதோ: எந்திரன்/ 2.0: ஷங்கரின் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இந்த இரண்டு படங்களுமே 'சூப்பர் ஹீரோ' படங்கள் தான். சாதாரண மனிதனால் செய்ய முடியாத செயல்களை, ஒரு ரோபோட் செய்யும். ஆனால், அதில் காட்டப்படும் காட்சிகள், நிஜ வாழ்க்கையில் சாத்தியமில்லாதவை.
மாயாஜாலங்கள் செய்யும் சூப்பர் ஹீரோக்கள்
முகமூடி: ஒரு முகமூடியை அணிந்து கொண்டு, மாயாவி போல மக்களுக்கு நல்லது செய்யும் ஒரு சூப்பர்மேன் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்திருப்பார். மிஸ்கின் இயக்கத்தில் வெளியான இந்த படத்தின் மூலம்தான் சினிமா துறைக்கு அறிமுகம் ஆனார் பூஜா ஹேக்டே என்பது குறிப்பிடத்தக்கது. ரா ஒன்(Ra-One): ஹிந்தியில் முதலில் வெளியான இந்த திரைப்படம், பின்னர் பல மொழிகளில் வெளியானது. ஹியூமனாய்டு ரோபோவை அடிப்படியாக கொண்ட இந்த திரைப்படம், இரண்டு AI உருவத்திற்கு ஏற்படும் சண்டையை மையமாக கொண்டது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஹீரோவாக நடித்திருப்பார். மின்னல் முரளி: தமிழ், மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படம், மின்னல் தாக்கி இருவருக்கு கிடைக்கும் மாயசக்திகளை கொண்டு எப்படி செயல்படுகிறார்கள் என்பது தான் மூலக்கதை. டோவினோ தாமஸ் ஹீரோவாக நடித்திருந்தார்.