ராஜமௌலி - மகேஷ் பாபுவின் 'வாரணாசி' படப்பிடிப்பு நிறைவு: ரிலீஸ் எப்போது?
செய்தி முன்னோட்டம்
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படமான 'வாரணாசி' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகளான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் பின்னணி இசை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "படப்பிடிப்பு முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. CG பணிகள் மற்றும் பின்னணி இசை வேலைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் டப்பிங் பணிகளைத் தொடங்க வேண்டும்." "இதை நீங்கள் ஒரு அப்டேட்டாக நினைத்தால், இதுதான் அப்டேட். இல்லையென்றால், மிகப்பெரிய 'பிளாஸ்ட்' அறிவிப்புக்காக இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டும்" எனப் படக்குழு பதிவிட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
WE R COMING ON 7TH APRIL 🔥🗿#Varanasi #MaheshBabu https://t.co/tpdOam1WhO pic.twitter.com/8c1HG26Mtb
— SSMBRO 🦁🦁 (@SSMB_2829) November 16, 2026
விவரங்கள்
காலப் பயணம், விண்கல் அச்சுறுத்தல் & ராமாயணக் காட்சி
கடந்த நவம்பர் 15-ஆம் தேதி ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற 'குளோப்ட்ராட்டர்' நிகழ்வில் இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது.
வாரணாசி, ஆப்பிரிக்கா மற்றும் அண்டார்டிகா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கால பயண சாகச கதையாக இது உருவாகியுள்ளது.
ஒரு பிரம்மாண்ட விண்கல்லால் ஏற்படும் அச்சுறுத்தலை மையமாகக் கொண்டு கதை நகர்வதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ராமாயணத்தை தழுவிய காட்சி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் பகவான் ராமருக்கும் கும்பகர்ணனுக்கும் இடையிலான போர்க் காட்சி படமாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் மகேஷ் பாபு ராமர் வேடத்தில் தோன்றுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, 130 அடி x 100 அடி பிரம்மாண்டத் திரையில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசர் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.