ஓடிடியில் வெளியானது 'ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே': தமிழில் எங்கு பார்ப்பது?
செய்தி முன்னோட்டம்
ஹாலிவுட் திரையுலகில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றான 'Spider Man Brand New Day' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பல வாரங்கள் வசூல் சாதனை படைத்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக ஓடிடி தளத்தில் தமிழ் டப்பிங்குடன் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை 31 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தைத் திரையரங்குகளில் பார்க்கத் தவறிய ரசிகர்களும், மீண்டும் பார்க்க விரும்பும் சினிமா பிரியர்களும் வீட்டில் இருந்தபடியே கண்டு ரசிக்கும் வகையில் தற்போது டிஜிட்டல் தளங்களில் கிடைக்கத் தொடங்கியுள்ளது.
வாடகை முறை
எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்?
இத்திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வாடகை செலுத்திப் பார்க்கும் (Rent / Pay-per-view) முறையில் வெளியாகியுள்ளது.
வழக்கமான பிரைம் சந்தா மூலம் இதை நேரடியாக இலவசமாகப் பார்க்க முடியாது தனியாக வாடகை செலுத்தியோ அல்லது வாங்கியோ பார்க்க வேண்டும்.
அமேசான் பிரைமில் தமிழிலும் இப்படம் காணக் கிடைக்கிறது.
இதுதவிர, ஆப்பிள் டிவி உள்ளிட்ட பிற இணையதள வீடியோ தளங்களிலும் இப்படம் வாடகை முறையில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
நடிகர்கள்
படத்தின் கதைக்களம்
டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கியுள்ள இப்படத்தில், டாம் ஹாலண்ட் மீண்டும் பீட்டர் பார்க்கர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
2021-ல் வெளியான 'நோ வே ஹோம்' படத்தின் முடிவில், டாக்டர் ஸ்ட்ரேஞ்சின் மந்திரத்தால் உலகம் முழுவதும் பீட்டர் பார்க்கரை மறந்துவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, தனது தனிப்பட்ட வாழ்க்கையை இழந்து தனிமையில் வாழும் பீட்டர், முழுநேர ஸ்பைடர் மேனாகக் குற்றங்களுக்கு எதிராகப் போராடுகிறார். அதேநேரம் அவரது உடலிலும் எதிர்பாராத ஆபத்தான மாற்றங்கள் ஏற்படுகின்றன.
இப்படத்தில் ஜெண்டயா, சேடி சிங்க், ஜேக்கப் பட்டலான், ஜான் பெர்ன்தால், மார்க் ரஃபல்லோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
குறிப்பாக சேடி சிங்க் 'ஜீன் கிரே' கதாபாத்திரத்தில் நடித்திருப்பது மார்வெல் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.