
'சூரரை போற்று' திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பிற்கு 'சர்ஃபிரா' என பெயரிடப்பட்டுள்ளது
செய்தி முன்னோட்டம்
தமிழில், சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா, ஊர்வசி மற்றும் அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியாகி, தேசிய விருதுகளை அள்ளிய திரைப்படம் 'சூரரை போற்று'.
இப்படத்தின் ஹிந்தி பதிப்பிற்கு, 'சர்ஃபிரா' என பெயரிடப்பட்டுள்ளது.
அக்ஷய் குமார் நடிக்கும் இந்த படத்தில், ராதிகா மதன் நாயகியாக நடித்துள்ளார்.
முன்னதாக 'ஸ்டார்ட் அப்' என பெயரிடப்பட்ட இப்படத்தையும் சுதா கொங்கராவே இயக்குகிறார்.
ஏர் டெக்கானின் நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையால் ஈர்க்கப்பட்ட திரைப்படம் இது. இத்திரைப்படம், ஜூலை 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தினை, சூர்யா-ஜோதிகாவின் 2 D என்டர்டைன்மெண்ட் நிறுவனமே தயாரிக்கிறது.
இப்படத்தில் சூர்யாவும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
'சர்ஃபிரா'
When the whole world is calling you a mad fool, a Sarfira is born!#Sarfira releasing only in cinemas on 12th July, 2024. #MaarUdi@akshaykumar #RadhikaMadan @SirPareshRawal @Sudha_Kongara #Jyotika @Suriya_offl @vikramix @rajsekarpandian @vbfilmwala @Abundantia_Ent… pic.twitter.com/ZlJKRSylGD
— Sudha Kongara (@Sudha_Kongara) February 13, 2024