சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைகிறார் ஜெயம் ரவி
செய்தி முன்னோட்டம்
ஜெயம் ரவியின் சமீபத்திய தீபாவளி வெளியீடான 'பிரதர்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திற்கு பின்னர் ஒரு பெரும் வெற்றியை தரவேண்டிய கட்டாயத்திலுள்ள ஜெயம் ரவி, அடுத்ததாக அனுபவம் வாய்ந்த இயக்குனர்களுடன் கை கோர்க்க திட்டமிட்டுள்ளார்.
அந்த வகையில் அவர் அடுத்தாக சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நெகடிவ் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என DTNext செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியின் படி, சமீபத்தில் நடந்த படத்தின் பூஜையிலும் ஜெயம் ரவி கலந்துகொண்டுள்ளார். இது சிவகார்த்திகேயனின் 25வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மறுபுறம் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஆகியோர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' என்ற படமும் விரைவில் வெளியாகவுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
As per DT Next,
— AmuthaBharathi (@CinemaWithAB) November 22, 2024
Pooja ceremony of #SK25 has been completed. Both #Sivakarthikeyan & #Jayamravi attended the Pooja💫🔥
Direected by SudhaKongara & GVPrakash Musical🎶
Shooting begins from Early 2025🎬 pic.twitter.com/FdqMyqKTCK