Page Loader
அயலானுடன் ரஹ்மான்: அக்டோபர் 6 ஆம் தேதி டீஸர் வெளியீடு
அயலான் டீஸர் அறிவிப்பை வெளியிட்ட ஏஆர் ரஹ்மான்

அயலானுடன் ரஹ்மான்: அக்டோபர் 6 ஆம் தேதி டீஸர் வெளியீடு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 02, 2023
11:34 am

செய்தி முன்னோட்டம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகிவரும் 'அயலான்' திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி இன்று, படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், படத்தின் டீஸர் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார். இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், பானுப்பிரியா என நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இந்த திரைப்படம், ஒரு சயின்ஸ் பிரிக்ஷன் படமாக தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்திற்காக, பல கோடிகள் செலவு செய்து VFX பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், படத்திற்காக பிரத்யேகமாக ஒரு ஏலியன் பொம்மை ஒன்றை தயாரித்துள்ளதாகவும் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். சிவகார்த்திகேயன் திரைபயணத்தில், அதிக பொருட்செலவில் எடுக்கப்படும் திரைப்படம் இதுவே.

ட்விட்டர் அஞ்சல்

அயலான் டீஸர் அறிவிப்பை வெளியிட்ட ஏஆர் ரஹ்மான்