NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / சிவகார்த்திகேயனின் பராசக்தி vs விஜய் ஆண்டனியின் பராஷக்தி; சர்ச்சையைக் கிளப்பிய டைட்டில் போஸ்டர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிவகார்த்திகேயனின் பராசக்தி vs விஜய் ஆண்டனியின் பராஷக்தி; சர்ச்சையைக் கிளப்பிய டைட்டில் போஸ்டர்கள்
    சிவகார்த்திகேயனின் பராசக்தி vs விஜய் ஆண்டனியின் பராஷக்தி

    சிவகார்த்திகேயனின் பராசக்தி vs விஜய் ஆண்டனியின் பராஷக்தி; சர்ச்சையைக் கிளப்பிய டைட்டில் போஸ்டர்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 29, 2025
    08:16 pm

    செய்தி முன்னோட்டம்

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படத்தின் தலைப்பு பராசக்தி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெயர் ஏற்கனவே ஊகிக்கப்பட்ட நிலையில், டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

    ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படம், பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசனின் முதல் படத்தின் தலைப்பாகும்.

    சிவகார்த்திகேயன் இதற்கு முன்னர் எதிர் நீச்சல், வேலைக்காரன், காக்கி சட்டை, மாவீரன் மற்றும் அமரன் என பழைய படங்களின் பெயர்களை வைத்த படங்கள் அனைத்தையும் ஹிட் கொடுத்துள்ளதால், இந்த படமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விஜய் ஆண்டனி

    விஜய் ஆண்டனியின் 25வது படத்துடன் தலைப்பு மோதல்

    சுவாரஸ்யமாக, விஜய் ஆண்டனி இன்று வெளியிட்ட தனது 25வது படத்திற்கும் கிட்டத்தட்ட இதே பெயரை வைத்துள்ளார்.

    அதன் தமிழ் போஸ்டரில் சக்தி திருமகன் என்று குறிப்பிடப்பட்டாலும், ஆங்கிலப் பதிப்பு பராஷக்தி என்ற பெயரைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

    இந்த இரட்டைப் பெயர் ரசிகர்களிடையே சில குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், இந்த தலைப்பை கடந்த ஆண்டு பதிவு செய்ததாக கூறிய விஜய் ஆண்டனி, ஆவண ஆதாரத்தை அளித்து தெளிவுபடுத்தினார்.

    இரண்டு படங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை குறிப்பிட்டு, சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிவகார்த்திகேயன்
    விஜய் ஆண்டனி
    கோலிவுட்
    சினிமா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சிவகார்த்திகேயன்

    ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' ஜிகர்தண்டா 2
    கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் - ஏலியன் புகைப்படம் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார் சிவகார்த்திகேயன் கிறிஸ்துமஸ்
    சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு யோகி பாபு
    தள்ளிப்போகும் அயலான் ரிலீஸ்; ரசிகர்கள் அதிர்ச்சி  திரைப்படம்

    விஜய் ஆண்டனி

    விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு  திரைப்படம்
    படப்பிடிப்புக்கு திரும்பினார் விஜய் ஆண்டனி?- மீண்டும் நடிக்க தொடங்கியதாக தகவல் திரைப்பட அறிவிப்பு
    மகளை இழந்த 9 நாட்களில், பட ப்ரோமோஷன் வேலைகளில் பங்கேற்றார் விஜய் ஆண்டனி திரைப்பட வெளியீடு
    வெளியானது விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' படத்தின் தீம் பாடல்  திரைப்படம்

    கோலிவுட்

    'அஜித் ரசிகன் - விஜய் தொண்டன்'; தவெக மாநாட்டில் சர்ப்ரைஸ் கொடுத்த அஜித் ரசிகர்கள் தமிழக வெற்றி கழகம்
    விடாமுயற்சி அப்டேட்; டப்பிங் பணிகள் தொடங்கியதாக அறிவித்தது படக்குழு நடிகர் அஜித்
    'கங்குவா' படத்தின் ரன்னிங் டைம், கதைக்களம், வெளியீட்டு தேதி மற்றும் சில தகவல்கள் கங்குவா
    அமரன் வசூல் வேட்டை; முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் இந்தியன் 2 சாதனை முறியடிப்பு சிவகார்த்திகேயன்

    சினிமா

    நாக சைதன்யா-சோபிதா துலிபாலா ஜோடிக்கு டிசம்பர் 4ஆம் தேதி திருமணம்; வைரலாகும் அழைப்பிதழ் திருமணம்
    ஹிந்தி மற்றும் தெலுங்கில் வெளியானது புஷ்பா 2: தி ரூல் டிரெய்லர் அல்லு அர்ஜுன்
    நாக சைதன்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியானது திரைப்பட அறிவிப்பு
    ஏ ஆர் ரஹ்மான் சொக்கத் தங்கம்; அவதூறு பரப்ப வேண்டாம்; சாய்ரா பானு வாய்ஸ் நோட் வெளியீடு ஏஆர் ரஹ்மான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025