சிவகார்த்திகேயனின் 23வது படத்தை இயக்குகிறார் ஏ ஆர் முருகதாஸ்
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான சிவகார்த்திகேயன் தனது 23வது படத்திற்காக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைகிறார். இயக்குனர் ஏஆர் முருகதாஸின் பிறந்த நாளான இன்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பின் சிவகார்த்திகேயன் இந்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன், முருகதாஸிடம் கதை கேட்டது இரட்டிப்பு மகிழ்ச்சி அளித்ததாகவும், இந்த படம் தனக்கு எல்லா விதத்திலும் சிறப்பானதாக அமையும் எனவும் பதிவிட்டுள்ளார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிருனல் தாக்கூர் நடிக்கிறார் எனவும் படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் என்வி பிரசாத் தயாரிப்பதாகவும், அடுத்த ஆண்டு(2024) படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.