
தி கோட் முதல் நாள் முதல் ஷோ; கோவையின் பிரபல தியேட்டரில் படம் பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன்
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் படம் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்களிடையே படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் கோயம்புத்தூரில் உள்ள பிராட்வே தியேட்டரில் ரசிகர்களுடன் முதல் நாள் முதல் ஷோவைப் பார்த்துள்ளார். தி கோட் திரைப்படத்தின் காலை 7 மணி காட்சியைத் திரையிட்ட தமிழகத்தின் ஒரே திரையரங்கம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
தி கோட் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு கவுரவ வேடத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, சிவகார்திகேயனைப் போல நடிகைகள் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
தியேட்டரில் சிவகார்த்திகேயன்
Siva Karthikeyan & lyricist Vivek watching #TheGOAT In Broadway cinemas CBEpic.twitter.com/s9dFRbupVS
— Vijay Fans Trends 🐐 (@VijayFansTrends) September 5, 2024
முதல் நாள் முதல் காட்சி
முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்த படக்குழு
படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் படத்தில் நடித்த பிரேம்ஜி அமரன், வைபவ், மற்றும் சிலர் சென்னையில் ரசிகர்களுடன் முதல் நாள் முதல் ஷோவைப் பார்த்துள்ளனர்.
ரசிகர்களைப் போலவே சினிமா நட்சத்திரங்களும் விஜய் படத்தின் வெளியீட்டைக் கொண்டாடி வருகின்றனர்.
வெங்கட் பிரபு இயக்கிய தி கோட் படத்தில் விஜய் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையை கவனிக்க, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை முறையே சித்தார்த்த நுனி மற்றும் வெங்கட் ராஜன் ஆகியோர் கையாண்டுள்ளனர்.