Page Loader
STR 50: முதன்முறையாக திருநங்கை வேடத்தில் நடிக்கும் சிம்பு!
முதன்முறையாக திருநங்கை வேடத்தில் நடிக்கும் சிம்பு!

STR 50: முதன்முறையாக திருநங்கை வேடத்தில் நடிக்கும் சிம்பு!

எழுதியவர் Venkatalakshmi V
May 22, 2025
03:50 pm

செய்தி முன்னோட்டம்

"STR 50" என்பது சிலம்பரசனின் 50வது படமாகும். இதை தேசிங்கு பெரியசாமி இயக்கி வருகிறார். இப்படம், சிலம்பரசன் தனது தயாரிப்பு நிறுவனமான ஆத்மன் சினி ஆர்ட்ஸின் கீழ் தயாரிக்கிறார். இது அவரின் முதல் தயாரிப்பாகும். இது ஆரம்பத்தில் கமல்ஹாசனின் தயாரிப்பில் STR 48 ஆகக் கருதப்பட்டது. ஆனால், அப்படம் கைவிடப்படவே, அதை சிம்பு கையிலெடுத்துள்ளார். இந்த படம் ஒரு காலமுறை அதிரடி திரில்லர் ஆகும். இதில் சிலம்பரசன் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இதெல்லாம் நீங்கள் அறிந்ததே. ஆனால் இப்படத்தில் அவர் ஒரு திருநங்கை வேடத்தில், அதுவும் ஒரு நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதை தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். 'தக் லைஃப்' படத்தின் ப்ரோமோஷன் பணிகளின் போது இந்த தகவல் வெளியானது.

விவரங்கள்

STR 50 எதற்காக கைவிடப்பட்டது என்பதை கமல் வெளிப்படுத்தினார் 

தக் லைஃப் படத்தின் ப்ரோமோஷனுக்கான நேர்காணலில் இயக்குனர் KS ரவிக்குமாரின் கேள்விக்கு பதிலளித்த கமல், தக் லைஃப் படத்திற்கு சிம்பு தேவைப்பட்டதால், STR 48 கைவிடப்படவேண்டிய நிலை என தெரிவித்தார். "எனினும், அது நல்ல கதை என்பதால், அதை தற்போது சிம்பு கையிலெடுத்துள்ளார்" எனக்கூறினார். அப்போது ரவிக்குமார், இப்படத்தில் சிம்பு திருநங்கையாக நடிப்பது உண்மையா எனக்கேட்டதற்கு, அதை சிம்பு ஆமோதித்தார். இந்த வீடியோ தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது. STR 50 படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக காயாடு லோஹர் நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைத்திருப்பது யுவன் ஷங்கர் ராஜா. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post