
தமிழ் பிக்பாஸை விட்டுவிட்டு ஸ்ருதிகா அர்ஜுன் இந்தி பிக்பாஸ் வீட்டுக்கு போனதன் காரணம் இதுதானா?
செய்தி முன்னோட்டம்
பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 18வது சீசனில் சமீபத்தில் இணைந்த ஸ்ருதிகா அர்ஜுன், பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இந்திக்கு சென்றது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அவரது திறமையை அங்கீகரித்த விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் அவர் ஏன் பங்கேற்கவில்லை என்று கேள்வி எழுப்பி தமிழ் ரசிகர்கள் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், ஸ்ருதிகா தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடந்த சீசனில் அழைக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் அந்த வாய்ப்பை நிராகரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், இந்தி பிக்பாஸில் பங்கேற்கும் வாய்ப்பு வந்தபோது, சல்மான் கான் ரசிகையாக, அவரை பார்த்து பேசும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் உடனடியாக ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
தயக்கம்
இந்தி பிக்பாஸில் பங்கேற்க தயக்கம்
சல்மான் கான் மீதான அன்பால் ஒத்துக் கொண்டாலும், ஒரு தமிழ்ப் பெண்ணாக இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேர தயக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
எனினும், மும்பையில் அவருக்கு கிடைத்த வரவேற்பு மற்றும் அன்பாக பழகும் மக்களால், ஈர்க்கப்பட்டு இந்தி பிக்பாஸ் சீசன் 18இல் பங்கேற்கும் முடிவை இறுதி செய்ததாக தெரிகிறது.
ஸ்ருதிகாவின் வெகுளித்தனமான பேச்சு மற்றும் செயல் இந்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், அவருக்காக தமிழ் ரசிகர்களும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
என்ன இருந்தாலும், தமிழ் பிக்பாஸில் வந்திருந்தால், நமக்கு எண்டெர்டைன்மெண்ட் கிடைத்திருக்கும் என தமிழ் ரசிகர்கள் ஒருபுறம் அங்கலாய்க்கின்றனர்.