Page Loader
நடிகர் தனுஷின் D50 திரைப்படத்தில் செல்வராகவன் 
நடிகர் தனுஷின் டி50 திரைப்படத்தில் செல்வராகவன்

நடிகர் தனுஷின் D50 திரைப்படத்தில் செல்வராகவன் 

எழுதியவர் Nivetha P
Jul 11, 2023
05:04 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், வரும் தீபாவளிக்கு இப்படம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நடிகர் தனுஷ், தனது 50வது படத்தினை, தானே இயக்கி நடிக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம், ரூ.100 கோடி செலவில் எடுக்கப்படவுள்ளதாம். மேலும் இப்படத்தில் தனுஷுடன் சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் அவரது சகோதரர்களாக நடிக்கிறார்கள் என்றும், த்ரிஷா, அமலா பால், காளிதாஸ், ஜெயராம், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

தனுஷ்

தனுஷ் ரசிகர்கள் உற்சாகம் 

அதனை தொடர்ந்து, இதன் படப்பிடிப்பு அண்மையில் துவங்கியதாக, போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்திருந்தது. இதில் தனுஷ் ஒரு கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு பிரபல ஸ்டுடியோவில், மிக பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அந்த செட்டில் தனுஷ், சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம். இந்நிலையில், இப்படப்பிடிப்பில் நடிகர், இயக்குனர் மற்றும் தனுஷின் அண்ணனான செல்வராகவன் பங்கேற்றுள்ளார் என்று ஓர் தகவல் கசிந்துள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே 'நானே வருவேன்' திரைப்படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது தனுஷை அறிமுகப்படுத்திய செல்வராகவன், தற்போது அவரது இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது தனுஷ் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.