Page Loader
'சாவதீக்க': விடாமுயற்சி முதல் பாடல் வெளியானது!
'விடாமுயற்சி' படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது

'சாவதீக்க': விடாமுயற்சி முதல் பாடல் வெளியானது!

எழுதியவர் Venkatalakshmi V
Dec 27, 2024
01:28 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் அஜித்குமார், திரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிக்க, மகிழ் திருமேனி இயக்கும் 'விடாமுயற்சி' படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது. அனிருத் இசையில் வெளியான இந்த பாடலை அந்தோணி தாசன், அனிருத் குரலில் ஒலிக்கிறது. 'சாவத்தீக்க' என துவங்கும் இந்த பாடல் அரேபிய இசை பாணியில் உள்ளது. கடந்த மாதம் படத்தின் டீஸர் வெளியான நிலையில், இன்று பாடல் வெளியாகியுள்ளது. இப்படம் பிரபல ஹாலிவுட் படமான பிரேக்டவுன் படத்தை தழுவி எடுக்கப்பட்டது என்ற பேச்சும் வெளியாகியுள்ளது. படத்தின் அநேக காட்சிகள் அஸர்பைஜானில் படமாக்கப்பட்டது. இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம், கடந்த 2023 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, தற்போது வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post