Page Loader
அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது சந்தானத்தின் 80ஸ் பில்டப் திரைப்படம்
அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது சந்தானத்தின் 80ஸ் பில்டப் திரைப்படம்

அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது சந்தானத்தின் 80ஸ் பில்டப் திரைப்படம்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 22, 2023
04:51 pm

செய்தி முன்னோட்டம்

சந்தானம் நடிப்பில், எஸ்.கல்யாண் இயக்கத்தில் சென்ற மாதம் வெளியான திரைப்படம் 80ஸ் பில்டப். திரையரங்குகளில் பெரிதாக ஓடாத இந்த திரைப்படம் தற்போது சத்தமின்றி ஓடிடி தளத்தில் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில், எந்தவித அறிவிப்பும் இன்றி இன்று இந்த 80ஸ் பில்டப் திரைப்படம் வெளியாகியுள்ளது, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சந்தானம் நடிப்பில் இந்த வருடம் வெளியான மூன்றாவது திரைப்படம் இந்த 80ஸ் பில்டப். இதில், டிடி ரிட்டன்ஸ் தீவிர, மற்ற இரண்டு படங்களும் பெரிதாக வசூல் செய்யவில்லை என்றே கூறலாம். 80ஸ் பில்டப் படத்தை இயக்கியது குலேபகாவலி, ஜாக்பாட் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.கல்யாண் ஆவார். இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடிகை ராதிகா ப்ரீத்தி நடித்திருந்தார்.

ட்விட்டர் அஞ்சல்

ஓடிடியில் வெளியானது சந்தானத்தின் 80ஸ் பில்டப்