Page Loader
'சிகந்தர்': சல்மான் கான்- ஏஆர் முருகதாஸ் இணையும் படத்தின் பெயர் வெளியீடு
சல்மான் கான் நடிக்கும் இந்த திரைப்படத்தை, சஜித் நதியாத்வாலா தயாரிக்கிறார்

'சிகந்தர்': சல்மான் கான்- ஏஆர் முருகதாஸ் இணையும் படத்தின் பெயர் வெளியீடு

எழுதியவர் Venkatalakshmi V
Apr 11, 2024
12:20 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் A.R முருகதாஸ் இயக்கத்தில், சல்மான்கான் நடிக்கும் ஹிந்தி திரைப்படத்தின் பெயர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 'சிகந்தர்' என பெயரிடப்பட்ட இந்த திரைப்படம், அடுத்த வருடம் ரம்ஜானுக்கு வெளியாகுமென முன்னதாக அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. சல்மான் கான் நடிக்கும் இந்த திரைப்படத்தை, சஜித் நதியாத்வாலா தயாரிக்கிறார். ரசிகர்களுக்கு ஈகை திருநாள் நல்வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டு, இந்த திரைப்படத்தின் புதிய போஸ்ட்டரை சல்மான் கான் வெளியிட்டார். 'கிக்', 'ஜுட்வா' மற்றும் 'முஜ்சே ஷாதி கரோகி' போன்ற பிளாக்பஸ்டர் படங்களுக்குப் பிறகு சல்மான் கான் மற்றும் சஜித் நதியாத்வாலா மீண்டும் இணையும் அதே நேரத்தில், 'ஜெய் ஹோ' படத்திற்கு பின்னர் AR முருகதாஸ் மீண்டும் சல்மான்கானுடன் இணைகிறார். முருகதாஸ் இதுவரை 4 பாலிவுட் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

embed

சல்மான் கான்- ஏஆர் முருகதாஸ் இணையும் திரைப்படம்

Iss Eid 'Bade Miyan Chote Miyan' aur 'Maidaan' ko dekho aur agli Eid Sikandar se aa kar milo.... Wish u all Eid Mubarak!#SajidNadiadwala Presents #Sikandar Directed by @ARMurugadoss @NGEMovies @WardaNadiadwala #SikandarEid2025 pic.twitter.com/5NIYdjPP9P— Salman Khan (@BeingSalmanKhan) April 11, 2024