நடிகை சாய் பல்லவியின் வீட்டில் விசேஷம்; வைரலாகும் புகைப்படங்கள்
செய்தி முன்னோட்டம்
ப்ரேமம் திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை பெற்றவர் சாய் பல்லவி.
அதன் பின்னர் தென்னிந்திய படங்களை தேர்வு செய்து நடித்து வரும் சாய் பல்லவி, தனக்கென ஒரு தனி பாதையை வகுத்து வருகிறார். அதீத மேக்அப் இல்லை, கவர்ச்சியான உடைகள் இல்லை,
அபாரமான நடனம் என சாய் பல்லவி மற்ற நடிகைகள் போல இல்லாமல், தனிப்பட்ட பாணியில் பயணித்து வருகிறார்.
இவரது தங்கை பூஜா. இவரும் ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளியான 'சித்திரை செவ்வானம்' என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார்.
இவருக்கு சோஷியல் மீடியாவில் ரசிகர் பட்டாளம் ஏராளம். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர், பூஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னுடைய காதலனை வெளி உலகிற்கு அறிமுகம் செய்தார்.
card 2
பூஜாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்
இரு வீட்டார் சம்மதத்துடன், தன்னுடைய காதலனை கரம் பிடிக்கவுள்ளதாக பூஜா கூறிய ஒரு வாரத்திலேயே, அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
பூஜா - வினீத் ஜோடியின் திருமண நிச்சயதார்த்தம் இரு வீட்டார் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இதில் நடிகை சாய் பல்லவி, தன் தங்கை மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து படுகர் இன பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனமான படுகா டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோடு நிச்சயதாரத்தின் போது எடுக்கப்பட்ட மணமக்களின் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
படுகா டான்ஸ் ஆடிய சாய் பல்லவி
God! Pls bless this family every single day n make them always happy & healthy...I want SAI PALLAVI to be HAPPY like this FOREVER ♾️🥹♥️#SaiPallavi @Sai_Pallavi92 #Poojakannan #OurFamily pic.twitter.com/IZauWy3eOt
— Sai Pallavi FC™ (@SaipallaviFC) January 22, 2024
ட்விட்டர் அஞ்சல்
பூஜாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்
#SaiPallavi at her sister engagement ceremony #Poojakannan |#vineeth pic.twitter.com/B2OrNII4Ww
— Goldwin Sharon (@GoldwinSharon) January 22, 2024