அடுத்த செய்திக் கட்டுரை

இன்ஸ்டாவில் காதலனை அறிமுகம் செய்த சாய் பல்லவியின் தங்கை பூஜா
எழுதியவர்
Venkatalakshmi V
Jan 17, 2024
11:38 am
செய்தி முன்னோட்டம்
ப்ரேமம் திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை பெற்றவர் சாய் பல்லவி.
அதன் பின்னர் தென்னிந்திய படங்களை தேர்வு செய்து நடித்து வரும் சாய் பல்லவி, தனக்கென ஒரு தனி பாதையை வகுத்து வருகிறார்.
அதீத மேக்அப் இல்லை, கவர்ச்சியான உடைகள் இல்லை, அபாரமான நடனம் என சாய் பல்லவி மற்ற நடிகைகள் போல இல்லாமல், தனிப்பட்ட பாணியில் பயணித்து வருகிறார்.
இவரது தங்கை பூஜா. இவரும் ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளியான 'சித்திரை செவ்வானம்' என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார்.
இவருக்கு சோஷியல் மீடியாவில் ரசிகர் பட்டாளம் ஏராளம்.
இந்த நிலையில், நேற்று, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னுடைய காதலனை வெளி உலகிற்கு அறிமுகம் செய்தார் பூஜா.
செய்தி இத்துடன் முடிவடைந்தது