LOADING...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையாவின் பயோபிக்; ட்ரைலரை வெளியிடும் சச்சின்
முத்தையாவின் பயோபிக் ட்ரைலரை வெளியிடும் சச்சின்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையாவின் பயோபிக்; ட்ரைலரை வெளியிடும் சச்சின்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 04, 2023
03:07 pm

செய்தி முன்னோட்டம்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளீதரன். முத்தையா முரளிதரன் உலக கிரிக்கெட் வரலாற்றில், மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர். இலங்கையின் சுழற்பந்து வீச்சாளரான இவர், தனது தனித்துவமான பந்துவீச்சுகளுக்கு பெயர் பெற்றவர். அவரின் வாழ்க்கை வரலாற்று படம், 800 என்ற தலைப்பில் தயாராகிறது. அந்த படத்தின் ட்ரைலரை, நாளை (செப்டம்பர் 5) செவ்வாய்க்கிழமை, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சச்சின் டெண்டுல்கரும், முத்தையா முரளீதரனும், களத்தில் எதிரிகளால் செயல்பட்டாலும், மைதானத்திற்கு வெளியே இருவரும் நெருங்கிய நண்பர்களாக பார்க்கப்பட்டனர். முந்தையா கதாபாத்திரத்தில், மாதுர் மிட்டல் என்பவர் நடித்திருக்கும் இப்படத்தை, எம் எஸ் ஸ்ரீபதி இயக்குகிறார். தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

முத்தையாவின் பயோபிக் ட்ரைலரை வெளியிடும் சச்சின்