Page Loader
கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு
நடிகை மனிஷா கொய்ராலாவும் இந்த படத்தில் நடிக்க போவதாக செய்திகள் பரவி வருகிறது

கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Apr 11, 2024
05:45 pm

செய்தி முன்னோட்டம்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய ரிலீஸ்களில் ஒன்றாகும். இந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் அடுத்த பாகத்தினை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இது ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் ஏற்கனவே அறிந்தது போல, சேனாபதி என்ற கதாபாத்திரத்தில் கமல் நடிக்கவுள்ளார். இந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகை மனிஷா கொய்ராலாவும் இந்த படத்தில் நடிக்க போவதாக செய்திகள் பரவி வருகிறது. 1996இல் வெளியான இந்தியன் திரைப்படத்தில் மனிஷா கொய்ராலா, ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே கதாபாத்திரம் இந்தியன் 2வில் இடம்பெறும் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அப்போது நடிக்கவில்லை எனக்கூறப்பட்டது.

திரைப்பட விவரங்கள்

இந்தியன் 2 திரைப்படம் வெளியீட்டிற்கு தயார்

இந்தியன் 2 திரைப்படம், ஜூன் 13ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால் , ரகுல் ப்ரீத் சிங் , பாபி சிம்ஹா மற்றும் மறைந்த நடிகர்கள் நெடுமுடி வேணு மற்றும் விவேக் உள்ளிட்ட ஒரு மெகா நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இதற்கிடையில், மனிஷா கொய்ராலா, இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் 'ஹீராமண்டி' மூலம் மீண்டும் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி ஆகியுள்ளார். இந்த நிலையில் தான், இந்தியன் 2 திரைப்படத்தில் அவர் இணைவது உறுதியாகியுள்ளது.