புதிய James Bond ஆனார் நடிகர் ராபர்ட் பாட்டின்சன்: டெனிஸ் வில்லெனுவே இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் 26-வது படம்
செய்தி முன்னோட்டம்
உலக புகழ்பெற்ற உளவாளி கதாபாத்திரமான ஜேம்ஸ் பாண்ட் 007 ஆக ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பாட்டின்சன் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திங்கட்கிழமை இரவு ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத் தொடரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, இரவு 8:30 மணிக்கு முன்னதாக 007-ன் X மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருந்த பழைய பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டு, " Identity confirmed" என்ற வாசகம் தொடர்ந்து பதிவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜேம்ஸ் பாண்டின் அடையாளமான கருப்பு நிற டக்ஸிடோ உடையில் ராபர்ட் பாட்டின்சன் இருக்கும் புகைப்படத்துடன் ஸ்டுடியோ அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பை வெளியிட்டது.
ஒரு புதிய அத்தியாயம்
ஜேம்ஸ் பாண்ட் சகாப்தத்தில் ஒரு புதிய அத்தியாயம்
நீண்ட காலமாக நடைபெற்று வந்த நடிகர் தேர்வுக்கு பிறகு ராபர்ட் பாட்டின்சன் இந்த பாத்திரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சினிமாவின் மிகவும் கொண்டாடப்படும் கதாபாத்திரங்களில் ஒன்றான ஜேம்ஸ் பாண்டிற்கு, ராபர்ட் பாட்டின்சனின் வருகை ஒரு "புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைக்கும்" எனத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜோஷ் ஓ'கானர் மற்றும் காலம் டர்னர் உள்ளிட்ட 5 முன்னணி நடிகர்கள் இறுதிப் பட்டியலில் இருந்த நிலையில், மற்ற போட்டியாளர்களை விடச் சிறந்த ஒப்பந்த விதிமுறைகள் பாட்டின்சனுக்கு வழங்கப்பட்டு அவர் இறுதி செய்யப்பட்டுள்ளார்.
2006-ல் 'கேசினோ ராயல்' முதல் 2021-ல் வெளியான 'நோ டைம் டு டை' வரை 5 படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்த டேனியல் கிரெய்க்கிற்கு பிறகு, 26-வது ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் பாட்டின்சன் நடிக்கவுள்ளார்.
சிறப்பம்சங்கள்
அமேசான்-எம்ஜிஎம் கூட்டணியில் உருவாகும் 26-வது படத்தின் சிறப்பம்சங்கள்
அசல் தயாரிப்பாளர் ஆல்பர்ட் "கப்பி" பிராக்கோலியின் வாரிசுகளான பார்பரா பிராக்கோலி மற்றும் மைக்கேல் ஜி வில்சன் ஆகியோரிடமிருந்து, 2025-ஆம் ஆண்டில் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகைக்கு அமேசான்-எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் ஜேம்ஸ் பாண்ட் உரிமையை வாங்கிய பிறகு உருவாகும் முதல் திரைப்படம் இதுவாகும்.
Dune படங்களின் இயக்குநர் டெனிஸ் வில்லெனுவே இப்படத்தை இயக்கவுள்ளார்.
Peaky Blinders புகழ் ஸ்டீவன் நைட் திரைக்கதை எழுதுகிறார்.
'ஹாரி பாட்டர்' தயாரிப்பாளர் டேவிட் ஹேமன் மற்றும் 'ஸ்பைடர் மேன்' தயாரிப்பாளர் ஏமி பாஸ்கல் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.