சூர்யா 44: படத்தில் டைட்டில் இதுதான்! ப்ரோமோ வீடியோவில் வெளியிட்டது படக்குழு
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூர்யா 44 திரைப்படத்தின் டைட்டில் இன்று வெளியானது. 'ரெட்ரோ' என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் 2025 சம்மரில் வெளியாகும். சூர்யாவின் கடைசி வெளியீடான கங்குவா அதிகம் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியை சந்தித்த நிலையில் தற்போது அவர் வெற்றி படத்தை தந்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா 2 வெற்றிக்கு பின்னர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இவர்கள் இருவரும் தற்போது முதல்முறையாக இணைந்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டது. இப்படத்தில் சூர்யாவுடன் ஜோடியாக பூஜா ஹெக்டேநடித்துள்ளார். படத்திற்கு கார்த்திக் சுப்புராஜின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்துள்ளார்.