எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் ஆகும் ரன்வீர் சிங் மற்றும் ஜானி சின்ஸ்..காரணம் என்ன?
எக்ஸ் தளத்தில் இன்று காலை முதல், பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் ஆபாச பட ஹீரோ ஜானி சின்ஸ் ஆகியோரின் பெயர்கள் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதற்கான காரணத்தை தேடிய ரசிகர்கள், ஒரு நிமிடம் ஆடித்தான் போனார்கள் என்று கூறவேண்டும். காரணம், இவர்கள் இருவரும் இணைந்து ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளனர். ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்காக விற்கப்படும் மருந்துகளை விளம்பரப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது அந்த விளம்பரம். பொதுவாகவே ரன்வீர் சிங் சர்ச்சையான விஷயங்களை, யாரும் எளிதில் செய்ய தயங்கும் விஷயங்களை செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. நிர்வாண போட்டோ ஷூட், பளிச் நிறத்தில் ஆடைகள், வித்தியாசமான அலங்காரம் என ரன்வீர் எப்போதும் தலைப்பு செய்திகளில் இடம்பிடிப்பவர். அந்த வரிசையில், இந்த விளம்பரமும் இடம்பிடித்துள்ளது.
கலவையான விமர்சனங்கள் பெறும் விளம்பரம்
இந்தி சீரியல் பாணியில் படமாக்கப்பட்டுள்ள அந்த விளம்பரத்தை, முதலில் பலரும் டீப் ஃபேக் டெக்னாலஜியை பயன்படுத்தி உள்ளனர் என கூறிய நிலையில், இதை ரன்வீர் சிங்கே தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, யுகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஜானி சின்ஸ் உடன் ரன்வீர் சிங் நடித்துள்ளதை பார்த்த ஒரு சில நெட்டிசன்கள், காசுக்காக இப்படி இறங்கிவிட்டாரே என சாடி வருகின்றனர். மறுபுறம், பாலியல் சார்ந்த விஷயங்களில் இதுவரை பெரிதாக விழிப்புணர்வு இல்லாத நேரத்தில், ரன்வீர் சிங் இந்த முயற்சியை எடுத்துள்ளது பாராட்டுக்குரியது என்றும் ஒரு சாரார் கருதுகின்றனர். எனினும் விளம்பரம் வாயிலாக பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்துள்ள ஜானி சின்ஸ், விரைவில் படங்களில் நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்பது தான் நெட்டிசன்களின் பொதுவான கருத்தாக உள்ளது.