ரஜினியின் 'வேட்டையன்' படத்தில் ராணா டகுபதியின் கதாபாத்திரம் வெளியீடு
T.J.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள 'வேட்டையன்' அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார் ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த சூழலில், படத்தில் ராணா டகுபதியின் கதாபாத்திரத்தின் பெயரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி, 'நட்ராஜ்' என்கிற கதாபாத்திரத்தில், மிடுக்கான தோற்றத்தில் நடிக்கிறார் ராணா. லைகா நிறுவனம் தயாரிக்கும் 'வேட்டையன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவும் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி, மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையில், இப்படத்தின் முதல் பாடலான 'மனசிலாயோ', பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்துள்ளது.