Page Loader
'ராமாயணா' படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கம்: ரன்பீர் கபூர், சாய்பல்லவி நடிப்பதாக தகவல்
ராமாயணம் திரைப்படத்தில் சாய் பல்லவி சீதா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்

'ராமாயணா' படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கம்: ரன்பீர் கபூர், சாய்பல்லவி நடிப்பதாக தகவல்

எழுதியவர் Srinath r
Oct 04, 2023
01:30 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் நிதிஷ் திவாரியின், 'ராமாயணா' திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ராமனாக பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கிறார். சீதையாக சாய்பல்லவி நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. கேஜிஎஃப் நடிகர் யாஷ், இத்திரைப்படத்தில் ராவணனாக நடிக்கிறார். அவர் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் படப்பிடிப்பில் பங்கேற்பார் என கூறப்படுகிறது. நடிகர் யாஷ் இத்திரைப்படத்திற்காக 15 நாட்கள் கால்ஷீட் தந்துள்ளார். மூன்று பாகங்களாக தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கி, ஆகஸ்ட் வரை நடைபெறும். முதல் பாகம், சீதை ராவணனால் அபகரித்து செல்லப்படும் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.

2nd card

ராமாயணத்தின் விஎஃப்எக்ஸ்

ராமாயணா திரைப்படத்திற்கு விஎஃப்எக்ஸ் காட்சிகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தின் விஎஃப்எக்ஸ் வேலைகளை, ஆஸ்கார் வென்ற டிஎன்இஜி(DNEG) நிறுவனம் செய்துள்ளது. படத்தில் இடம்பெறும் விஎஃப்எக்ஸ் காட்சிகள் ரசிகர்களை ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கும் என சொல்லப்படுகிறது. முதலில் இப்படத்தில், சீதை வேடத்தில் ஆலியா பட் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், ஆலியா பட்டின் கால்ஷீட் இல்லாததால், அவர் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது அவருக்கு பதிலாக சாய் பல்லவி நடிக்கிறார். இதுதான் சாய்பல்லவியின் நேரடி முதல் ஹிந்தி படமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது