இந்தியன் 2 தோல்வியை ஈடு செய்ய கேம் சேஞ்சர் உடன் களம் இறங்கும் இயக்குனர் ஷங்கர்
ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் மற்றும் கியாரா அத்வானியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான 'கேம் சேஞ்சர்' தாமதம் குறித்த வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வந்தது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருந்தனர். இந்நிலையில், இப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஊழல் நிறைந்த அரசியல் அமைப்பை எதிர்த்துப் போராடும் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியின் கதையைச் சொல்லும் இந்தப் படம் முதலில் தசரா ரிலீஸாகத் திட்டமிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கேம் சேஞ்சர் படத்தின் மூலக்கதையை ராஜு மற்றும் சிரிஷ் தயாரித்துள்ளனர். இதன் மூலம் இயக்குனர் ஷங்கர் தெலுங்கு திரையுலகில் நேரடியாக அறிமுகமாகிறார்.
மாஸ்கோ சர்வதேச திரைப்பட வாரத்தில் தயாரிப்பாளர் வதந்திகளுக்கு பதில் அளித்தார்
நடந்து வரும் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் நியூஸ் 18க்கு அளித்த பேட்டியில், படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, வெளியீட்டு தேதி வதந்திகள் குறித்து தெளிவுபடுத்தினார். படப்பிடிப்பு நிறைவடைந்து, இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு படத்தை வெளியிட உள்ளோம் என்றார். "இந்தப் படம் ஷங்கர் சார் மற்றும் ராமின் உருவங்களை மாற்றும் என்று எதிர்பார்க்கிறேன். இது இந்திய அரசியலின் ஒரு அம்சத்தைத் தொட்டு, சமூகக் கருப்பொருளை ஆராய்கிறது. இது பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்புகிறேன்" எனத்தெரிவித்தார்.
'கேம் சேஞ்சர்' வழக்கமான ஹீரோ-வில்லன் படம்
இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெறும் என்றும், இது ஒரு வழக்கமான ஹீரோ-வில்லன் படம் என்றும் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்தார். "ஷங்கர் சார் இந்த மாதிரியான படத்தை முன்பே செய்திருக்கிறார், ஆனால் ரோபோவுக்குப் பிறகு, அவர் தனது கதை சொல்லும் பாணியை மாற்றினார். தற்போது அவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு கேம் சேஞ்சர் மூலம் அவரது பழைய நிலைக்குத் திரும்புகிறார்" ராஜு மேலும் கூறினார். இப்படம் ஷங்கருக்கும் மிகவும் முக்கியமான படமாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2 படம் தந்த படுதோல்வியை இப்படம் மூலம் ஆவர் ஈடு செய்யவேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஜெயராம், நவீன் சந்திரா, சுனில், ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.