
தனது பெயரையோ, குரலையோ சட்டவிரோதமாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை: ரஜினிகாந்த் அறிக்கை
செய்தி முன்னோட்டம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தனது அனுமதி இல்லாமல், தனது பெயரையோ, குரலையோ வணீக ரீதியாக பயன்படுத்துபவர்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
வழக்கறிஞர் எஸ்.இளம்பாரதி என்பவர், ரஜினிகாந்த் சார்பில் இந்த அறிக்கையை இரண்டு தினங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ளார்.
மேலும், "தனது ஆளுமை, பெயர், குரல், உருவம் போன்றவற்றை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதில் நடிகருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது" என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நோட்டீசில், "வர்த்தகரீதியில், தங்கள் பொருட்களை மக்களிடையே விளம்பரப்படுத்த ரஜினியின் பெயர், குரல், புகைப்படம் போன்றவற்றை பயன்படுத்துவோருக்கு மட்டுமே இது பொருந்தும் எனவும், மேடை கலைஞர்களுக்கோ, மிமிக்ரி கலைஞர்களுக்கோ இது பொருந்தாது." எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை
Absolute need of the hour! #Rajinikanth pic.twitter.com/gsl7XiiEE7
— Preeti Solanki (@preetisolanki) January 30, 2023