
கேரளாவுக்கு ஷூட்டிங்கிற்கு செல்கிறார் சூப்பர்ஸ்டார்; விஜய் தங்கும் அதே ஹோட்டலில் தங்கவுள்ளார்
செய்தி முன்னோட்டம்
தளபதி விஜய் தற்போது GOAT படத்தின் ஷூட்டிங்கிற்காக கேரளாவில் தங்கியுள்ளார்.
தற்போது அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் நாளை 'வேட்டையன்' படப்பிடிப்பிற்காக கேரளாவிற்கு கிளம்பவுள்ளார்.
செய்திகளின்படி, ரஜினி, விஜய் தங்கியுள்ள அதே நட்சத்திர ஹோட்டலில் தான் தங்க உள்ளாராம்.
எனவே விஜய்யும் ரஜினியும் சந்தித்து கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு அவர்களின் ரசிகர்களிடத்தில் உள்ளது.
முன்னதாக காக்கா-பருந்து கதைக்கே இரு பக்கமும் ரசிகர்கள் முட்டிக்கொண்டனர்.
இதனை ரஜினி வன்மையாக கண்டித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது இவர்கள் இருவரும் கேரளாவில் சந்தித்தால், அது நிச்சயமாக ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும்.
விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு பிறகு, பொதுவெளியில் ரஜினியும், விஜயும் சந்தித்துக்கொள்ளும் தருணமும் இதுவாக இருக்கலாம்.
ட்விட்டர் அஞ்சல்
கேரளா செல்லும் ரஜினி
As per Malayalam news article report,
— AmuthaBharathi (@CinemaWithAB) March 20, 2024
Superstar #Rajinikanth coming to Trivandrum tomorrow for #Vettaiyan shooting & 2 weeks of schedule is planned there🎬💥#ThalapathyVijay's #TheGreatestOfAllTime shooting is already happening in Trivandrum🤝
Report says that both Superstar… pic.twitter.com/glWUsa4tpI