
கார் சாவியை காணவில்லை என புகார் அளித்த சௌந்தர்யா ரஜினிகாந்த்
செய்தி முன்னோட்டம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளும், VIP 2 திரைப்படத்தின் இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த், தன்னுடைய காரின் சாவியும், அது அடங்கிய சிறிய பௌச்சும் காணவில்லை என சென்னை, தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் அந்த புகாரில், சென்ற ஏப்ரல் 23-ஆம் தேதி, கோபாலபுரத்திலிருந்து, தேனாம்பேட்டை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு செல்லும் வழியில் தான், சாவி காணாமல் போனதாக கூறியுள்ளார் சௌந்தர்யா.
இந்த காரின் சாவியை யாரேனும் திருடி விட்டார்களா, அல்லது இவர் தவற விட்டாரா என்பது குறித்து இன்னும் சரியான தகவல் வெளியாகவில்லை.
கடந்த மார்ச் மாதம், இவரின் அக்கா ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
சென்னை காவல்துறையிடம் சௌந்தர்யா புகார்
#JustIn | தனது காரின் மற்றொரு சாவி, பவுச்சுடன் காணவில்லை என சவுந்தர்யா ரஜினிகாந்த், காவல் நிலையத்தில் புகார்!#SunNews | #SoundaryaRajinikanth | @soundaryaarajni pic.twitter.com/awATY4K2bQ
— Sun News (@sunnewstamil) May 10, 2023