OTTயில் ரஜினியின் 'வேட்டையன்' படத்தை எப்போது, எங்கு பார்க்கலாம்
ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் நடித்த அதிரடி க்ரைம் திரைப்படமான 'வேட்டையன்' , அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பலரும் அறிந்த தகவலாக இருப்பினும், இப்போது படத்தின் வெளியீட்டு தேதி பற்றிய குறிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் அக்டோபர் 10ஆம் தேதி, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியானது. வெளியான நான்கு நாட்களில் ₹100 கோடியைத் தாண்டிய போதிலும், அது ₹136.45 கோடி நிகர வசூலுடன் பாக்ஸ் ஆபிஸில் போராடி வருகிறது.
'வேட்டையன்' கதைக்களம் மற்றும் தயாரிப்பு விவரங்கள்
டி.ஜே.ஞானவேல் இயக்கிய வேட்டையன், அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் வியாபாரத்தை பற்றிய கதை. இந்த குற்றத்தின் விசாரணை வழக்கத்திற்கு மாறான முறைகளை- என்கவுன்டர்களை பயன்படுத்தும் ஒரு போலீஸ் அதிகாரியால் தீர்த்து வைக்கப்படுகிறது. படத்தின் குழும நடிகர்கள் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், ரித்திகா சிங் மற்றும் ராணா டகுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
தீபாவளிக்கு பிறகு 'வேட்டையன்' பிரைம் வீடியோவில் வெளியாகும்
அமேசானின் ஸ்ட்ரீமிங் சேவையான அமேசான் பிரைம் வீடியோ, வேட்டையனின் டிஜிட்டல் உரிமையை ₹90 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்திய தகவல்களின்படி, படம் தீபாவளிக்குப் பிறகு நவம்பர் 7 ஆம் தேதி இந்த ஓடிடி தளத்தில் திரையிடப்படும். இந்த மாத தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியான பிறகு பரந்த பார்வையாளர்களை சென்றடையும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.