ரஜினியின் 'வேட்டையன்': அமெரிக்க பிரீமியர் டே விற்பனையில் ₹80லட்சம் வசூல்
டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'வேட்டையன்' திரைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளிவருவதற்கு முன்பே கணிசமான வருவாயை ஈட்டியுள்ளது. இந்த திரைப்படம் அமெரிக்காவில் ப்ரீமியர் டே ஷோக்களுக்காக 4K டிக்கெட்டுகளுக்கு மேல் விற்றுள்ளதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 100 காட்சிகளில் இருந்து கிட்டத்தட்ட $97K (சுமார் ₹80 லட்சம்) வசூலித்துள்ளது. உலகளவில் ₹600 கோடிக்கு மேல் வசூலித்த ரஜினிகாந்தின் முந்தைய ஹிட் 'ஜெயிலர்' படத்தினை தொடர்ந்து இப்படம் வெளியாவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
32 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த்-அமிதாப் மீண்டும் இணையும் படம் 'வேட்டையன்'
வேட்டையனில் அமிதாப் பச்சன் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர். 32 வருட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்துடன் அவர் மீண்டும் திரையில் இணைந்துள்ளார். இந்த இரண்டு மெகாஸ்டார்களும் கடைசியாக முகுல் எஸ் ஆனந்தின் ஹம் என்ற ஹிந்தி படத்திற்காக இணைந்து நடித்தனர். இப்படத்தில் ராணா டகுபதி, ஃபஹத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வேட்டையன் படம் தசரா பண்டிகையை ஒட்டி அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்டையான் ட்ரைலர் ஏற்கனவே 10 மில்லியன் வ்யூஸ்களை தாண்டியுள்ளது. படத்தின் கதைக்களம் ஒரு ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி அமைப்புக்கு சவால் விடுவதைச் சுற்றி நகரும் என கூறப்படுகிறது.