ஜெயிலர்: ஆகஸ்ட் 10 திரைக்கு வருமென அறிவிப்பு
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த கோடை விடுமுறைக்கே படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்படுகிறது என செய்திகள் வெளியாகின. இது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில், நெல்சனிடம் படத்தை பற்றிய அப்டேட் கேட்கப்பட்ட போது, ரஜினியின் ஷூட்டிங் முடிந்து விட்டது என்றும், படத்தை குறித்து விரைவில் அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகும் எனவும் கூறினார். அப்போதிருந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து கொண்டிருந்த வேளையில், இன்று மாஸாக ஒரு அப்டேட்டை தயாரிப்பாளர்களான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அளித்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில், ரஜினியுடன் மீண்டும் இணைகிறார் ரம்யாகிருஷ்ணன்.