LOADING...
'கூலி' படத்தின் இரண்டாவது பாடல், 'மோனிகா': வைப் செய்ய ரெடியா?

'கூலி' படத்தின் இரண்டாவது பாடல், 'மோனிகா': வைப் செய்ய ரெடியா?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 11, 2025
06:00 pm

செய்தி முன்னோட்டம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகவுள்ள 'கூலி' படத்தின் இரண்டாவது பாடலான 'மோனிகா' தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலில் சிறப்பு தோற்றத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, இந்த பாடலை படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ளார். பாடலை எழுதியவர் விஷ்ணு எடவன், நடனம் வடிவமைத்தது சாண்டி மாஸ்டர். 'மோனிகா' பாடலை அனிருத் உடன் இணைந்து சுப்ளாஷினி மற்றும் அசல் கோலார் பாடியுள்ளனர். முன்னதாக வெளியான பாடலின் ப்ரோமோ வீடியோவில், பூஜா ஹெக்டேவுடன், சௌபின் ஷாஹிர் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் நடனமாடுகிறார்கள். எனினும், பூஜா ஹெக்டேவின் பங்கு பாடலில் தோன்றும் தோற்றத்திற்கு மட்டுப்படுத்தப்படுமா இல்லையா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

விவரங்கள் 

'கூலி' படத்தின் விவரங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா மற்றும் சௌபின் ஷாஹிர் ஆகியோரும் நடிக்கின்றனர். ரெபா மோனிகா ஜான் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்றும், ஆமிர் கானும் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இப்படத்தின் முதல் பாடலான 'சிக்கிட்டு' பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அது தற்போது சார்ட்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. அந்த பாடலை அனிருத் உடன் டி.ராஜேந்தர் பாடியுள்ளார். 'கூலி' வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post