Blacksheep RJவிக்னேஷ்காந்தின் 50 மணி நேரம் போட்காஸ்ட்டிற்கு ரஜினிகாந்த் வாழ்த்து
பிளாக்ஷீப் ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், 50 மணி நேர இடைவிடாத போட்காஸ்ட் நேரடி ஒளிபரப்பு நடத்தியதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். விக்னேஷ்காந்த் மற்றும் அவரது குழுவினர் அதிகம் சிரமப்பட வேண்டாம் என்று குரல் குறிப்பு ஒன்றையும் அவர் அனுப்பினார். அவர்களின் கடின உழைப்புக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இந்த 50 மணிநேர நான்-ஸ்டாப் போட்காஸ்ட்டிற்காக விக்னேஷ்காந்த் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ரஜினியின் 50 ஆண்டு கால திரை வாழ்க்கையை போற்றும் விதமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், திரைப்படத் துறையைச் சேர்ந்த இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் ரஜினியின் ரசிகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ரஜினியின் வாய்ஸ் மெஸேஜ்
பிளாக்ஷீப் பற்றி
பிளாக்ஷீப் தமிழ் என்பது RJ விக்னேஷ்காந்த் மற்றும் 'சுட்டி' அரவிந்த் ஆகியோரால் நிர்வகிக்கப்படும் ஒரு YouTube சேனல். இந்த சேனல், ரஜினிகாந்தை கௌரவிக்கும் வகையில், சென்னையில் 50 மணி நேர இடைவிடாத நேரலை நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்வு சென்னை அமிஞ்சிக்கரையில் உள்ள பிரபல மாலில் நடைபெற்றது. செப்டம்பர் 8 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நிறைவுற்ற இந்த கின்னஸ் நிகழ்ச்சியின் இறுதியில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார் மற்றும் பிரதிநிதிகள் கின்னஸ் சாதனை சான்றிதழை விக்னேஷ்காந்திடம் வழங்கினர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வரவிருக்கும் திரைப்படமான 'வேட்டையன்' வெளியீட்டிற்கு தயாராகி வருகிறார். இப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையில், அவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் 'கூலி' படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார்.