NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / லால் சலாம் ரிலீஸ்; ரஜினி மற்றும் தனுஷின் எக்ஸ் பதிவு வைரல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    லால் சலாம் ரிலீஸ்; ரஜினி மற்றும் தனுஷின் எக்ஸ் பதிவு வைரல்
    படத்தில் ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்திருந்தாலும், அவரை திரையில் காண்பதை பலரும் கொண்டாடி வருகின்றனர்

    லால் சலாம் ரிலீஸ்; ரஜினி மற்றும் தனுஷின் எக்ஸ் பதிவு வைரல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 09, 2024
    12:07 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'லால் சலாம்' திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது.

    படத்தில் ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்திருந்தாலும், அவரை திரையில் காண்பதை பலரும் கொண்டாடி வருகின்றனர்.

    இந்த நிலையில் மற்ற ரசிகர்களை போல, தானும் படத்தை எதிர்நோக்குவதை பதிவிட்டுள்ளனர் ரஜினிகாந்தும், தனுஷும்.

    இருவரும் தங்கள் எக்ஸ் தளத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டது தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

    நடிகர் ரஜினி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகைபடத்தை பதிவிட்டு, "என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்" என குறிப்பிட்டு, அவர் ரஜினியை வீல் சேரில் தள்ளி வருவது போன்ற புகைப்படத்தை பகிர்ந்திருந்தது அனைவரையும் நெகிழ வைத்தது.

    தனுஷ்

    தனுஷின் பதிவு

    தனுஷோ, ரஜினியின் பதிவை ரிட்வீட் செய்துள்ளார். அது கூடவே, "இன்று முதல் லால் சலாம்" என குறிப்பிட்டு, தான் என்றும் ரஜினி ரசிகன் என்பதை உணர்த்தியுள்ளார்.

    தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விட்டு பிரிந்திருந்தாலும், அவருடைய படத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருப்பது, பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

    அதுமட்டுமின்றி, சமீபத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவின் போதும், மேடையில் பேசிய தனுஷ், முதலில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு தனது வணக்கங்களை தெரிவித்தே உரையை துவங்கினார்.

    லால் சலாம் திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.

    ஸ்போர்ட்ஸ் ட்ராமா திரைப்படமாக கருதப்படும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடித்துள்ளனர். படத்திற்கு இசை ஏ.ஆர். ரஹ்மான்.

    ட்விட்டர் அஞ்சல்

    தனுஷின் பதிவு

    Lal Salaam From today !

    — Dhanush (@dhanushkraja) February 9, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    ரஜினி பதிவு

    என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்.உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்@ash_rajinikanth #LalSalaam pic.twitter.com/bmRe8AGLkN

    — Rajinikanth (@rajinikanth) February 9, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஜினிகாந்த்
    தனுஷ்
    திரைப்பட வெளியீடு
    திரைப்படம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    ரஜினிகாந்த்

    விஜய் வர்மாவை விரைவில் திருமணம் செய்யவுள்ள தமன்னா பாட்டியா? நடிகர்
    ஜனவரி 12ல் வெளியாகும் விஜய் சேதுபதி-கத்ரீனா கைஃப்பின் 'மெரி கிறிஸ்மஸ்' திரைப்படம் இயக்குனர்
    ஜப்பான் தோல்வி எதிரொலி: அதிக திரையரங்குகளை கைப்பற்றும் ஜிகர்தண்டா டபுள்X கார்த்திக் சுப்புராஜ்
    திரையுலகம் சார்பில் கலைஞர்100- ரஜினிக்கு நேரில் அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் கலைஞர் கருணாநிதி

    தனுஷ்

    தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்': படப்பிடிப்பை நிறைவு செய்தார் சிவராஜ்குமார் கோலிவுட்
    'மாமன்னன் ஒரு உணர்ச்சிகரமான திரைப்படம்': தனுஷ் புகழாரம்  கோலிவுட்
    தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது  போஸ்டர் வெளியீடு
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேர்த்திக்கடனை செலுத்திய நடிகர் தனுஷ் நடிகர்

    திரைப்பட வெளியீடு

    விடுதலை-2 திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் டீ-ஏஜிங் தொழில்நுட்பம் விஜய் சேதுபதி
    துருவ நட்சத்திரத்திலிருந்து சூர்யா பின்வாங்கியது, விஜய் யோஹனை நிராகரித்த காரணம்..: GVM ஓபன் டாக் கௌதம் வாசுதேவ் மேனன்
    சாண்டி மாஸ்டரின் 'ரோசி' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பா ரஞ்சித்
    ஹரிஷ் கல்யாண்- எம்எஸ் பாஸ்கர் நடித்துள்ள பார்க்கிங் படத்தின்  ட்ரெய்லர் வெளியானது தமிழ் திரைப்படம்

    திரைப்படம்

    வைரலாகும் மிர்ச்சி சிவா நடிக்கும் சூது கவ்வும் 2 படத்தின் ஸ்டில்ஸ்  மிர்ச்சி சிவா
    ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' ஜிகர்தண்டா 2
    21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வடிவேலு பெற்றார் வடிவேலு
    ஆஸ்கார் விருதுகளுக்கான உத்தேச பட்டியல்: இந்திய சார்பில் தேர்வான '2018' போட்டியை விட்டு விலகியது ஆஸ்கார் விருது
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025