LOADING...
'கூலி' படத்தில் நடித்த ரஜினி, அமீர் கான் உள்ளிட்ட நடிகர்கள் பெற்ற சம்பளம் இதுதான்
'கூலி' திரைப்படம் ஆகஸ்ட் 14 வியாழக்கிழமை வெளியாகவுள்ளது

'கூலி' படத்தில் நடித்த ரஜினி, அமீர் கான் உள்ளிட்ட நடிகர்கள் பெற்ற சம்பளம் இதுதான்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 13, 2025
07:59 am

செய்தி முன்னோட்டம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம் ஆகஸ்ட் 14 வியாழக்கிழமை வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் ஆகியோர் சிறப்பு வேடத்தில் நடிக்கின்றனர். படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில், இயக்குனர் மற்றும் நடிகர்கள் பெற்ற சம்பளம் குறித்து நெட்டிசன்கள் ஆர்வமாக உள்ளனர். இதுவரை நமக்குத் தெரிந்தவை இங்கே.

சூப்பர் ஸ்டார்களின் சம்பளம்

ரஜினிகாந்த் மற்றும் அமீர் கான்

டெக்கான் ஹெரால்டு செய்தியின்படி, ரஜினிகாந்த் கூலி படத்திற்காக ₹150-250 கோடி வரை சம்பளம் வாங்கினார். மறுபுறம், பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து இருந்தபோதிலும், அமீர் கான் 'கூலி' படத்தில் நடித்ததற்காக சம்பளம் வேண்டாம் என கூறியதாக என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், முரண்பட்ட தகவல்கள் உள்ளன, ஒரு வட்டாரம் அவர் ₹20 கோடி பெற்றதாகக் கூறுகிறது. இதற்கிடையில், ஆடியோ லான்ச்சின் போது 'கூலி' படத்தில் தான் நடிக்க ஒப்புக்கொண்டது ரஜினிகாந்திற்கு தான் செய்யும் மரியாதை என அமீர் கான் கூறினார்.

மற்ற டாப் நடிகர்கள்

நாகார்ஜுனா மற்றும் ஸ்ருதி ஹாசன்

தெலுங்கு மெகா ஸ்டார் நாகார்ஜுனா 'கூலி' படத்தில் வில்லனாக சைமன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாகார்ஜுனா தனது வேடத்திற்காக ₹10-30 கோடி வரை சம்பளம் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், 'கூலி' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கும் ஸ்ருதி ஹாசனுக்கு, ₹4 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் கதாபாத்திரமான தேவாவுடன் நெருக்கமாக பணியாற்றும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடிப்பார்.

Advertisement

மற்றவர்கள்

நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் சம்பள விவரங்கள்

நடிகர் சத்யராஜ், 'கூலி' படத்திற்காக ₹5 கோடி பெற்றதாக கூறப்படுகிறது. கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திரா தனது வேடத்திற்காக ₹4-5 கோடி வரை வாங்கியதாக கூறப்படுகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'கூலி' படத்தை இயக்க ₹50 கோடி வாங்கியதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் படத்தின் இசையமைப்பில் தனது பங்களிப்பிற்காக சுமார் ₹15 கோடி சம்பளம் பெற்றார்.

Advertisement